உள்ளூர் செய்திகள்

சாரணர் இயக்க மாணவர் எண்ணிக்கை 10 லட்சமாக உயர்த்த முடிவு

சென்னை: பாரத சாரண, சாரணியர் இயக்கத்தில் மாணவர் எண்ணிக்கையை, 10 லட்சமாக உயர்த்த உள்ள தாக, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.நாட்டின், 77வது சுதந்திர தின விழா, சென்னை காமராஜர் சாலையில் உள்ள, பாரத சாரண - சாரணியர் இயக்க தலைமையக வளாகத்தில் நடந்தது. பாரத சாரண - சாரணியர் இயக்கத்தின், தமிழக தலைமை கமிஷனர், பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி, தேசிய கொடியேற்றி, மாணவ - மாணவியர் அணிவகுப்பை ஏற்றார்.அப்போது அவர் பேசியதாவது:தற்போது 4 லட்சமாக உள்ள, சாரண - சாரணியர் இயக்கத்தின் மாணவர் எண்ணிக்கையை, 10 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல், சென்னையில் உள்ள சாரணர் இயக்க தலைமை அலுவலக வளாகத்தை, 1 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கவும், அரசின் அனுமதி கிடைத்துள்ளது. பள்ளிக் கல்வி அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட உத்தரவிட்டார்.இவ்வாறு அவர் கூறினார்.விழாவில் இயக்குனர்கள் கண்ணப்பன், பழனி சாமி, உமா, இணை இயக்குனர்கள் நரேஷ், கோபிதாஸ், ராஜேந்திரன், சென்னை சி.இ.ஓ., மார்ஸ் மற்றும் சாரணர் இயக்க நிர்வாகிகள் பங்கேற்றனர். தேச ஒற்றுமையை வலியுறுத்தி, மாணவ - மாணவியர் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். முன்னதாக நுங்கம்பாக்கம் டி.பி.ஐ., வளாகத்தில் தனியார் பள்ளி இயக்குனரகம் முன், இயுக்குனர் நாகராஜமுருகன், தேசியக் கொடியேற்றினார். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் லதா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.அமைச்சர் ஆப்சென்ட்சாரணர் இயக்க தலைமையகத்தில் நடக்கும் சுதந்திர தின விழாவில், வழக்கமாக பள்ளிக்கல்வி அமைச்சர் தேசிய கொடியேற்றுவது வழக்கம். அமைச்சர் மகேஷ் மருத்துவ சிகிச்சைக்கு பின், வீட்டில் ஓய்வு எடுப்பதால், நேற்று அவர் விழாவுக்கு வரவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்