நீட், ஜே.இ.இ., ஹால் டிக்கெட்; 14 லட்சம் மாணவர்கள் பதிவிறக்கம்
புதுடில்லி: நீட் , ஜே.இ.இ., தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட் டை 14 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு தடைவை மருத்துவ படிப்பிற்கான நீட் மற்றும் பொறியியல் படிப்பிற்கான ஜே.இ.இ., (மெயின்) தேர்வுகள் வரும் செப்., ல் நடைபெற உள்ளன. ஜே.இ.இ.,தேர்வு செப்.,1 முதல் 6 ம் தேதி வரையிலும், நீட் தேர்வு செப்.,13 ம் தேதியும் நடைபெற உள்ளது.இது குறித்து என்.டி.ஏ., தெரிவித்து இருப்பதாவது: திட்டமிட்டபடி ஜே.இ.இ., (மெயின்) நுழைவுத்தேர்வு வரும் 1-ம் தேதி முதல் 6 ம் தேதி வரையிலும் , நீட் தேர்வு செப்., 13ம் தேதியிலும் நடைபெற உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட் 26ம் தேதி முதல் டவுண்லோடு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி ஜே.இ.இ.,மெயின் தேர்வை எழுத இருக்கும் 8.58 லட்சம் பேரில் 7.41 லட்சம் பேர் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்துள்ளனர். 332 பர் தங்களின் தேர்வு மையங்களை மாற்றும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்நீட் தேர்வை பொறுத்தவரையில் 15.97 லட்சம் பேர் நுழைவுத்தேர்வை எழுத உள்ளனர் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்ட நேரத்தில் இருந்து ஐந்து மணி நேரத்திற்குள்ளாக சுமார் 6.84 லட்சம் பேர் தங்களின் ஹால் டிக்கெட்டைபதிவிறக்கம் செய்துள்ளனர்.மேலும் தேர்வுகளை எழுத உள்ளவர்கள் அவர்களின் விருப்பத்தேர்வாக முதலாவது நகரமே ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்வாளர்கள் சரியான நேரத்திற்கு தேர்வு மையத்திற்கு சென்று சேரும் வகையில் போக்குவரத்து வசதிகளை செய்து தரும்படி மாநில அரசை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தேர்வாளர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் சமூக இடைவெளி மற்றும் பிற விதிமுறைகளை பின்பற்றுவதில் ஒத்துழைப்பு தர வேண்டும்.ஜே.இ.இ., (மெயின்) தேர்வு மையங்களின் எண்ணிக்கை 570 ல் இருந்து 660 ஆகவும், நீட் தேர்வு மையங்களின் எண்ணிக்கை 2,546-ல் இருந்து 3,843 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜே.இ.இ., தேர்வு கம்ப்யூட்டர் அடிப்படையிலானது என்றும், நீட் தேர்வு பேனா மற்றும் காகிதம் அடிப்படையிலானது என என்டிஏ தெரிவித்து உள்ளது.ஜே.இ.இ., (மெயின்) தேர்வு முதலில் ஏப்.,7-11 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஜூலை 1823 என மாற்றப்பட்டு இறுதியாக செப் 1-6 என முடிவாகி உள்ளது. அதே போல் நீட் தேர்வும் மே 3-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு , பின்னர் ஜூலை 26 ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இறுதியாக செப்.,13ம் தேதி நடைபெறும் என முடிவாகி உள்ளது.