உள்ளூர் செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ்., இடங்கள்

சென்னை சைதாப்பேட்டை எத்திராஜ் நகர், வ.உ.சி., தெருவில், &'பசுமை சைதை&' திட்டத்தின், 5ம் ஆண்டு துவக்கத்தை ஒட்டி, மரக்கன்று நடும் நிகழ்ச்சியை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்தார்.பின் அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2015ல் அறிவிப்பு வெளியிடப்பட்டு, 2019ல் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக மத்திய அரசு, &'ஜிகா&' என்ற, பன்னாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டது. தமிழக அரசு சார்பில், மதுரை தோப்பூரில், 224.24 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. ஆறு ஆண்டுகளில் இதுவரை சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது.குஜராத் போன்ற மாநிலங்களில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க., மத்திய அரசுக்கு எந்த அழுத்தமும் தராததால் பணிகள் தாமதமாயின.150 இடத்திற்கு அனுமதிஇந்நிலையில், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து, எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் தீவிரம் காட்டி வருகிறது.பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியதுடன், நேரில் சென்றும் பணிகளை விரைவில் துவக்க வலியுறுத்தினார்.அதன் பயனாக, வரும் கல்வியாண்டில் எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரியில், 150 மாணவர்களை சேர்த்து கொள்ள எய்ம்ஸ் நிர்வாகம், தமிழகத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இந்த மாணவர்களை, புதுச்சேரி ஜிப்மர், மதுரை அரசு மருத்துவ கல்லுாரி அல்லது தனியார் கல்லுாரி, மதுரை கலை கல்லுாரிகளில் ஏதேனும் ஒன்றில் அனுமதித்து, முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதற்குள், மதுரை தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டு, அங்கு மாணவர்களை மாற்றி கொள்ள லாம் என, யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியாக வராதுமத்திய அரசின் யோசனைப்படி, மாணவர்களை சேர்க்க முடியாது. குறிப்பாக, மதுரை அரசு மருத்துவமனையில், 250 எம்.பி.பி.எஸ்., இடங்கள் ஏற்கனவே உள்ளன. இந்த, 150 இடங்களை சேர்த்தால், 400 மாணவர்களுக்கான கட்டமைப்பு இருக்காது.அதேபோல, பக்கத்து மாநிலமான புதுச்சேரியிலும் மாணவர்களை சேர்ப்பது சரியாக இருக்காது. தனியார் மருத்துவ கல்லுாரிகளிலும் இதே நிலை தான். 2 பரிந்துரைகள் எனவே, 150 எம்.பி.பி.எஸ்., இடங்களை, மதுரை, தேனி, சிவகங்கை ஆகிய மூன்று அரசு மருத்துவ கல்லுாரிகளிலும் தலா, 50 இடங்கள் சேர்த்து படிக்க வைப்பது; மதுரை, தேனி, சிவகங்கை, துாத்துக்குடி, திருச்சி என, ஐந்து மருத்துவ கல்லுாரிகளில், தலா 30 மாணவர்களாக பிரித்து படிக்க வைப்பது என, இரண்டு பரிந்துரைகளை, விரைவில் மத்திய அரசுக்கு அளிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்