புத்தகத் திருவிழாவில் கோளரங்கம் கண்காட்சிக்கு 20,000 பேர் வருகை
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நடந்த புத்தகத்திருவிழாவில் தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கோளரங்கத்தை 20 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்.ராமநாதபுரம் ராஜா பள்ளி மைதானத்தில் பிப். 2 முதல் 12 வரை புத்தகத்திருவிழா நடந்தது. இதில் தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையம் சார்பில் நடமாடும் கோளரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. இதில் புவியின் குடும்ப பயணம், விண்ணில் தேடும் கண்ணாடி, ஐஸ் வேல்டு, வொண்டர்ஸ் ஆப் யுனிவர்சல் ஆகிய படங்கள் திரையிடப்பட்டன.ஒரு படம் 5 நிமிடங்கள் வரை திரையிடப்படும். இதனை 20 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர். தொலைநோக்கி அமைக்கப்பட்டு தினமும் மாலை 6:00 முதல் 9:00 மணி வரை வியாழன் கோளை மக்கள் பார்வையிட்டனர்.அறிவியல் கண்காட்சியும், நடமாடும் அறிவியல் வாகனமும் மக்கள் பார்வைக்காக வைத்திருந்தனர். ஏற்பாடுகளை கோளரங்கத்தின் காட்சி கூட போதகர்கள் சரவணன், விஜயன் செய்தனர்.