உள்ளூர் செய்திகள்

சி.யூ.இ.டி., யு.ஜி., - 2024

இளநிலை பட்டப்படிப்புகள் மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட என்.டி.ஏ., எனும் தேசிய தேர்வு முகமை இத்தேர்வுகளை நடத்துகின்றன.அறிமுகம்சி.யூ.இ.டி., - யு.ஜி., எனும் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான இந்த பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு வாயிலாக, மத்திய பல்கலைக்கழகங்கள், நாடு முழுவதும் உள்ள மாநில பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பிற பங்கேற்கும் நிறுவனங்களில் ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.தகுதிகள்: 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தேர்வு எழுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு ஏதும் இல்லை.தேர்வு முறை:இத்தேர்வு ஹைப்ரிட் முறையில், சி.பி.டி., எனும் கணினி அடிப்படையிலான தேர்வு அல்லது பேனா, காகித முறையிலான தேர்வாக நடத்தப்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான பதிவுகளைக் கொண்ட பாடங்களுக்கு, ஆப்டிகல் மார்க் ரெகக்னிஷன் - ஓ.எம்.ஆர்., வடிவத்தை பயன்படுத்தி பேனா மற்றும் காகித முறையில் தேர்வு நடத்தப்படுகிறது. மற்றவர்களுக்கு கணினி அடிப்படையிலானதாக நடத்தப்படுகிறது.பாடத்திட்டம்: மொழி பாடம், துறை சார்ந்த பாடம் மற்றும் பொது தேர்வு ஆகிய பாடங்கள் இடம் பெறும். பொது தேர்வை பொறுத்தவரை, பொது அறிவு, சமீப நிகழ்வுகள், பொது மனத்திறன், எண் திறன், குவாண்டிடேட்டிவ் ரீசனிங், லாஜிக்கல் அண்டு அனலெட்டிக்கல் ரீசனிங் ஆகிய பகுதிகளில் இருந்து கேளிவிகள் கேட்கப்படுகிறது. கேள்விகள் அனைத்தும் &'மல்டிபில் சாய்ஸ்’ வடிவில் இடம்பெறும். தேர்வு மொழி: ஆங்கிலம், இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படும்.தேர்வு மையம்: வெளிநாட்டில் உள்ள 26 நகரங்கள் உட்பட 380 நகரங்களில் உள்ள மையங்களில் இத்தேர்வு நடத்தப்படுகிறது.விண்ணப்பிக்கும் முறை: https://cuetug.ntaonline.in/frontend/web/registration/index எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 26தேர்வு நடைபெறும் நாட்கள்: மே 15 முதல் 31 வரைவிபரங்களுக்கு:  https://cuetug.ntaonline.in/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்