வடபழனி எஸ்.ஆர்.எம்.ஐ.எஸ்.டி-ன் டிசாபியோ 25- திறன் போட்டி
சென்னை: வடபழனி எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் எம்.பி.ஏ துறை சார்பில் டிசாபியோ 25 எனப்படும் கல்லூரிகளுக்கிடையேயான மேலாண்மை திறன் போட்டி நடைபெற்றது.மாணவர்களின் மேலாண்மை திறன்களை மேம்படுத்தவும், திறமைகளை வெளிப்படுத்தவும் மற்றும் தொழில்முறை அறிவை பகிர்ந்து கொள்ளவும் இந்த போட்டி நடத்தப்படுகிறது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். வடபழனி எஸ்.ஆர்.எம்.ஐ.எஸ்.டி மேலாண்மை பீடத்தின் டீன் பேராசிரியர் சசிரேகா பாராட்டுரை வழங்கினார். டிஜிட்டல் மார்க்கெட்டரும், யூடியூப் பிரபலமும், நடிகருமான அனிருத் கனகராஜ் நிறைவுரையாற்றினார். இந்நிகழ்வை டிவைன் புட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கிருபாகரன் மைக்காப் பிள்ளை சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.