உள்ளூர் செய்திகள்

எம்.டெக். சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு: 26, 27ம் தேதிகளில் நடக்கிறது

புதுச்சேரி: எம்.டெக். படிப்புகளுக்கான சென்டாக் நுழைவுத் தேர்வு வரும் 26ம் தேதி துவங்கி இரண்டு நாட்களுக்கு நடக்கிறது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் 350 எம்.டெக். இடங்கள் உள்ளன. புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரியில் மட்டும் 173 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் கடந்த ஜூன் 18ம் தேதி துவங்கியது. கடைசி நாளான நேற்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்க சென்டாக் அலுவலகத்தில் மாணவர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மாலை 5.00 மணி வரை நீண்ட வரிசையில் நின்று விண்ணப்பங்களை சமர்ப்பித்துவிட்டு சென்றனர். நேற்று வரை 700 விண்ணப்பங்கள் சென்டாக் அலுவலகத்திற்கு வந்துள்ளது. தபாலில் பலர் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளதால் விண்ணப்ப எண்ணிக்கை ஆயிரத்தைத் தொடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பி.டெக். படிப்பிற்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. எம்.டெக். படிப்பிற்கு நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. எம்.டெக். படிப்பிற்கான சென்டாக் நுழைவுத் தேர்வு அரசு பொறியியல் கல்லூரியில் வரும் 26ம் தேதி துவங்கி 2 நாட்கள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்