உள்ளூர் செய்திகள்

தேசிய இளைஞர் விழா போட்டி: நவ.31க்குள் விண்ணப்பிக்கலாம்

விருதுநகர்: தேசிய இளைஞர் விழா கலை போட்டிகளில் பங்கேற்பவர்கள் நவ.,31க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் 20 வது தேசிய இளைஞர் விழா ஜன.,12 முதல் 16 முடிய நடக்கிறது. இதில் நாட்டுபுற நடனம், நாட்டுபுற பாட்டு, ஓரங்க நாடகம் (இந்தி, ஆங்கிலம்) கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி சங்கீதம், பேச்சு போட்டி, ஹார்மோனியம், மிருதங்கம், புல்லாங்குழல், வீணை, சிதார், கிடார், தபேலா, மணிப்புரி நடனம், பரத நாட்டியம், குச்சுப்புடி, கதக், ஒடிஸி நடனம் போன்றவைகளில் சிறந்து விளங்கும் 13 முதல் 25 வயதுக்குட்பட்ட ஆண்,பெண்கள் 100பேர் தமிழ்நாட்டின் சார்பில் கலந்து கொள்ள உள்ளனர். மாவட்ட அளவில் அணித்தேர்வு நவ.,30க்குள் நடத்த உத்தரவிடப்பட்டது. மாவட்ட தேர்வில் வெற்றி பெற்றவர்கள் டிச.,7ல் திருச்சியில் நடக்கும் மாநில அளவில் தேர்வில் கலந்து கொள்வர். இப்போட்டியில் கலந்து கொள்பவர்கள் www.sdat.tn.gov.in இணைய தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவ.,30க்குள் ywtnadu@gmail.com இணைய தளத்தில் முகவரியில் சமர்ப்பித்து போட்டியில் கலந்து கொள்ளலாம் என, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்