உள்ளூர் செய்திகள்

தமிழ் திறனறி தேர்வு: வரும் 4ல் ரிசல்ட்!

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1 மாணவர்களில், தமிழ் மொழியில் திறன் பெற்றவர்களுக்கு, முதல்வரின் கல்வி உதவித்தொகை திட்டம், இரு ஆண்டுகளாக அமலில் உள்ளது.இதில் ஆண்டுதோறும், 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாதம் 1,500 ரூபாய் வீதம், இரண்டு ஆண்டுகளுக்கு உதவி தொகை வழங்கப்படும். நடப்பு கல்வியாண்டில், இந்த உதவி தொகை பெறுவதற்கான தமிழ் இலக்கிய திறனறி தேர்வு, அக்., 15ம் தேதி நடந்தது. இதில், 2 லட்சத்து, 36,910 பேர் பங்கேற்றனர்.தேர்வு முடிவுகள் நேற்று வெளியாவதாக இருந்தது. ஆனால், நாளை மறுதினம் காலை 11:00 மணிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விபரங்களை, www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்