உள்ளூர் செய்திகள்

பட்டதாரி ஆசிரியர் பணிக்கு கூடுதலாக 610 இடம் சேர்ப்பு

சென்னை: பட்டதாரி ஆசிரியர் பணி தேர்வில், கூடுதலாக 610 காலியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர், வட்டார வள மைய ஆசிரியர் பணியில், 2,582 காலியிடங்களை நிரப்ப, இந்த ஆண்டு பிப்ரவரியில், ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., சார்பில் போட்டி தேர்வு நடத்தப்பட்டது. விரைவில், தேர்ச்சி பெற்றவர் விபரம் வெளியிடப்பட உள்ளது.தற்போது, இதில் மேலும் 610 காலியிடங்கள் சேர்க்கப்பட்டு, அதற்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக, டி.ஆர்.பி., செயலர் ராமேஸ்வர முருகன் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்