பகுதிநேர பொறியியல் படிப்பு: ஜன. 9 கவுன்சிலிங்
மதுரை: மதுரை அண்ணா தொழில்நுட்ப பல்கலையில் பகுதிநேர பொறியியல் படிப்புக்கு ஜன. 9ம் தேதி கவுன்சிலிங் நடக்க உள்ளது. இப்பல்கலையின் பதிவாளர் இ.பி. பெருமாள் பிள்ளை கூறியதாவது: மதுரை அண்ணா தொழில்நுட்ப பல்கலையில் பகுதிநேர பி.இ., வகுப்புகள் நடக்க உள்ளன. சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பிரிவுகளில் வகுப்புகள் நடைபெறும். மதுரை பல்கலை, திண்டுக்கல், ராமநாதபுரம் பகுதியில் உள்ள உறுப்பு கல்லூரிகளில் வகுப்பு நடைபெறும். இதில் சேர 600 பேர் விண்ணப்பித்துள்ளனர். இம்மாணவர்களின் சேர்க்கைக்காக ஜன. 9 ல் கவுன்சிலிங் நடக்க உள்ளது. பொறியியல் ஆராய்ச்சிப் படிப்பில்(பிஎச்.டி.,) மாணவர்கள் சேர்க்கை ஜன. 10, 11 ல் நடக்க உள்ளது. இதற்கு 400 பேர் வரை விண்ணப்பித்துள்ளனர் என்றார்.