போலி சான்றிதழ்களா? தண்டனை நிச்சயம்
பொறியியல் மாணவர் சேர்க்கையில் முன்னணி கல்லூரிகளில் இடம் பெறவும், அரசு சலுகைகளை பெறவும் போலி சான்றிதழ் பயன்படுத்தியது கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது மாணவ, மாணவியருக்கே தெரியாமல் சில சட்ட விரோதிகள் மூலமாக போலி சான்றிதழ்களை அவர்களது பெற்றோரே தயாரித்திருந்த சம்பவமும் கண்டுபிடிக்கப்பட்டது. பொதுவாக, விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கப்படும் அனைத்து சான்றிதழ்களின் உண்மை தன்மை தீவிரமாக ஆய்வு செய்யப்படுகின்றன. போலி சான்றிதழ் பயன்படுத்துபவர் மீதான நடவடிக்கைகள்:1. போலி சான்றிதழ் பயன்படுத்தி பொறியியல் கவுன்சிலிங் மூலமாக சேர்க்கை பெற்றிருந்தால் அத்தகைய மாணவ, மாணவியரது 4 ஆண்டு படிப்பு காலத்தில் எப்போது வேண்டுமானாலும் இடைநீக்கம் செய்யப்படுவர்.2. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பொறியியல் கவுன்சிலிங்கில் பங்கேற்கவும் தடைவிதிக்கப்படுவர்.3. மாணவ, மாணவியர் மட்டுமின்றி பெற்றோர் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, உண்மையான சான்றிதழ்களை மட்டுமே பயன்படுத்தி, நேர்மையான முறையில் சேர்க்கை பெற்று தைரியமாக படியுங்கள்.