உள்ளூர் செய்திகள்

அமெரிக்காவில் தமிழ் இணைய மாநாடு

அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில், 10வது தமிழ் இணைய மாநாடு நடந்தது. இதில், புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரி தமிழ் பேராசிரியர் இளங்கோவன், இணைய வழித் தமிழ் பாடங்கள் என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை வழங்கினார். ஐம்பத்துக்கும் மேற்பட்ட தமிழ்க் கல்வி சார்ந்த இணையதளங்களை ஆய்வு செய்து இக்கட்டுரை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இணையம் வழியாக கல்வி கற்கும் சூழல் உள்ள நிலையில், இணையம் வழியாக தமிழ் மொழியை பிறருக்கு கற்பிக்கவும் வசதிகள் உள்ளன. இக்கட்டுரையில், பென்சில்வேனியா பல்கலை இணையதளத்தில் ஆங்கிலம் வழியாக பேச்சுத் தமிழ், தமிழ் அகரவரிசை, தமிழ் பண்பாட்டுக் கூறுகளை கற்பதற்கு வசதிகள் உள்ளன. அதுபோல், தமிழக அரசின் தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் நெடுங்கணக்கு தொடங்கி, மழலைக் கல்வி, சான்றிதழ் கல்வி உள்ளதையும், இதை ஆசிரியர்களும், மாணவர்களும் பயன்படுத்தி தமிழை எளிதாகக் கற்கலாம் என்றும் விளக்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்