உள்ளூர் செய்திகள்

சென்னை மருத்துவக் கல்லூரிக்கு முதலிடம்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர்வதற்கான மருத்தவ பொதுக் கலந்தாய்வை அமைச்சர் டாக்டர் விஜய் வெள்ளிக்கிழமை காலை துவக்கி வைத்தார். கலந்தாய்வில் பங்கேற்று முதல் 10 இடங்களில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு அவர்களுக்கான சேர்க்கை ஆணையை அமைச்சர் விஜய் வழங்கினார். முதல் 10 இடங்களைப் பிடித்த சிவரஞ்சனி, தாட்சாயினி, சுருதி கணேஷ், சுரேஷ் பால்ராஜ், ஹரிநிவாஸ், துளஷீபா சவுந்தர்யா, அகிலா, மணிகண்டன், சிவசக்திவேல், அருண்குமார் ஆகியோர் சென்னை மருத்தவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பை தேர்வு செய்தனர். இவர்களுக்கான சேர்க்கை ஆணையை விஜய் வழங்கினார். மருத்துவக் கலந்தாய்வில், பெரும்பாலான மாணவர்கள் சென்னை மருத்துவக் கல்லூரிக்கே முக்கியத்துவம் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்