உள்ளூர் செய்திகள்

கர்நாடக உயர் நீதிமன்ற பணி

கர்நாடக மாநிலத்தில் உள்ள உயர் நீதி மன்றத்தில் 31 லா கிளார்க் கம் ரிசர்ச் அசிஸ்டன்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேவைகள் என்னென்ன:கர்நாடக உயர் நீதி மன்றத்தின் இந்தப் பதவிக்கு 01.01.1980க்குப் பின்னர் பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மூலமாக சட்டத்தில் பட்டப் படிப்பைக் குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். மேலும் கர்நாடக மாநில பார் கவுன்சிலில் 01.01.2008க்குப் பின்னர் பதிவு செய்திருக்க வேண்டும். தலைமை நீதிபதி அவர்களால் நியமிக்கப்படும் நீதிபதி குழுவினர் கல்வித் தகுதி, இதர தகுதிகள் அடிப்படையில் விண்ணப்பங்களைப் பரிசீலித்து நேர்காணல் முறையில் தேர்ந்து எடுப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதர தகவல்கள்:இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள் மட்டும் தங்கள் விண்ணப்பங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து, பாஸ்போர்ட் அளவு புகைப் படத்தை ஒட்ட, தொடர்புடைய கல்வித் தகுதிக்கான சான்றிதழ் நகல்கள், வயதுக்கான சான்று, இதர தகுதிகளுக்கான சான்று போன்றவற்றை இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தை அனுப்பும் கவரின் மீது தவறாமல் Application for Appointment Law clerk & cum & Research Assistants என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முதலில் இணையதளத்திற்கு சென்று முழுமையான தகவல்களை அறியவும். விண்ணப்பங்கள் 19.08.2011க்குள் சென்றடைவதனை உறுதி செய்யவும். முகவரி: Registrar General,High Court of Karnataka,Bangalore. இணையதள முகவரி: http://karnatakajudiciary.kar.nic.in/recruitmentNotifications/lawclerk-2011.pdf


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்