இந்தியக் குடிமகனின் கடமையும், உரிமையும்
இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்பது ஒரு பெரிய தொகுப்பாகும். சட்ட மேதை அம்பேத்கரால் உருவாக்கப்பட்டு, அதன்பிறகு பல்வேறு திருத்தங்களையும், மாற்றங்களையும் கண்டுள்ளது நமது அரசியலமைப்புச் சட்டம். இந்தியன் பீனல் கோட் என்பதைத்தான் ஐ.பி.சி. என்று சுருக்கமாக அழைக்கிறார்கள். அதன்படி, இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் உள்ள அடிப்படைக் கடமை என்று நம் ஐ.பி.சி. என்ன கூறுகிறது என்று பார்ப்போம். ஐ.பி.சி. பகுதி 5ல் அடிப்படைக் கடமைகளைப் பற்றி விவரிக்கிறது 1976ம் ஆண்டுதான் இந்த பகுதி சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து இவை பெறப்பட்டுள்ளது. 1. தேசியக் கொடியையும், தேசிய கீதத்தையும் மதித்து நடக்க வேண்டும். 2. எல்லா குடிமக்களும் அரசியல் சட்டத்தை மதித்து பே வேண்டும். 3. சுதந்திரத்திற்காகப் போராடிய நமது தலைவர்களை பின்பற்றி நடக்க வேண்டும். 4. எல்லா குடிமக்களும் நாட்டைப் பாதுகாக்க வேண்டும். நாட்டுக்காக தேவைப்படும் போது சேவை செய்ய தயாராக இருக்க வேண்டும். 5. அனைவரும் சாதி, மத, மொழி, இன, எல்லை கடந்த சகோதர மனப்பான்மையை உருவாக்க வேண்டும். 6. நமது பழம் பெருமை மிக்க பாரம்பரியத்தை காக்க வேண்டும். 7. காடுகள், நதிகள், ஏரிகள் உள்ளிட்ட இயற்கையும் வன விலங்குகளையும் பாதுகாக்க வேண்டும். 8. அறிவியல், மனிதாபிமானம், சீர்திருத்த உணர்வுகளை வளர்க்க வேண்டும். 9. வன்முறையைத் தவிர்த்து அரசு சொத்துக்களை பாதுகாக்க வேண்டும். 10. பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ, நமது குழந்தைகளுக்குக் கல்வி வாய்ப்புகளை 14 வயது வரை கட்டாயமாக தர வேண்டும் என்பனவையாகும். கடமை என்று இருந்தால் உரிமை என்பது நிச்சயம் இருக்கும். அந்த வகையில், இந்திய குடிமகனுக்கு உள்ள உரிமைகள் யாவை என்று பார்ப்போம். இந்திய அரசியலமைப்பு, முதலில் ஏழு அடிப்படை உரிமைகளைக் கொண்டிருந்தது. 1978ம் ஆண்டு 44வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி, சொத்துரிமையானது அடிப்படை உரிமையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதால், தற்போது ஆறு அடிப்படைகள் உரிமைகள் உள்ளன. 1. சமத்துவ உரிமை 2. சுதந்திரத்திற்கான உரிமை 3. சுரண்டலக்கு எதிரான உரிமை 4. சமயச் சுதந்திரத்திற்கான உரிமை 5. பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள் 6. அரசியலமைப்பு தீர்வு வழிகளுக்கான உரிமை ஆகியவையாகும்.