உள்ளூர் செய்திகள்

வேளாண் பல்கலையில் முதுகலை படிப்பு

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் புட் சயின்ஸ் அன்ட் புராசசிங் படிப்பில் முதுகலை பட்டம் பெற மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்குநரகம் 2011-12ம் ஆண்டுக்கான முதுகலை படிப்பில் மாணவர்கள் சேர அழைப்பு விடுத்துள்ளது. உணவு உற்பத்தி, சமைப்பதற்கு ஏற்ற வகையில் உருவாக்குதல், தர நிர்ணயம், உணவு உற்பத்தி மற்றும் மேம்படுத்துதல், பைகளில் அடைத்தல் போன்றவை இந்த படிப்பில் அடங்கும். அறிவியல் பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஒராண்டு காலம் நடத்தப்படும் இந்த படிப்பு இரண்டு செமஸ்டர்களைக் கொண்டதாகும். புத்தகங்கள் பல்கலையில் தரப்படும். வகுப்புகள் வார இறுதி நாட்களில் நடத்தப்படும். ஆகஸ்ட் 29ம் தேதிக்குள் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். இயக்குநர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்குநரகம் கோவை - 641003,தொலைபேசி எண் - 0422-6611229 94421-11048, 94421-11057.மின்னஞ்சல் - odl@tnau.ac.inஇணையதள முகவரி  - www.tnau.ac.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்