உள்ளூர் செய்திகள்

அயர்லாந்தில் படித்துக் கொண்டே சம்பாதியுங்கள்

தற்போது அயர்லாந்தில் பணியாற்றிக் கொண்டே முதுகலை பட்டம் பயிலும் வகையில் விசா முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விசா முறையின் கீழ், பணியாற்றிக் கொண்டே அயர்லாந்தின் எந்தவொரு பல்கலைக் கழகத்திலும் முதுகலை பட்டம் பெற்றவர்கள், மேலும் ஒராண்டு காலம் தங்கியிருந்து வேலை தேடிக் கொள்ளவும் அவகாசம் அளிக்கப்படுகிறது. திறமையான நபர்களுக்கு வேலை செய்வதற்கான உரிமத்தையும், க்ரீன் கார்ட் வசதியையும் அளிக்க அயர்லாந்து அரசு தயங்குவதே இல்லை. அயர்லாந்தில் உள் மைக்ரோசாப்ட், ஆரக்கல், சிமென்டக், கூகுள், இன்டெல், எச்.பி. போன்ற மிகப்பெரிய சாப்ட்வேர் மற்றும் ஆர்ட்சேர் நிறுவனங்களுக்கு தற்போது மனித வள பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களுக்கு, நல்ல தகுதி வாய்ந்த, திறமையான மாணவர்களை உருவாக்க, ஏராளமான மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என அயர்லாந்து நிர்வாகம் பல்கலைகளை ஊக்குவித்து வருகிறது. இதையடுத்தே பல பல்கலைக் கழகங்கள் ஊக்க நிதிகளுடன் கூடிய முதுகலைப் பட்டங்களை வழங்கவும் திட்டமிட்டுள்ளன. க்ரிப்பித் பல்கலைக்கழகம், குளோபல் ட்ரீ கன்சல்டன்சியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, 70 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. அயர்லாந்தில் எம்.பி.ஏ. பயில விரும்புவோர் விண்ணப்பங்களை பெற்று அனுப்பவும். ஆகஸ்ட் 20ம் தேதிதான் விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்