உள்ளூர் செய்திகள்

புதுச்சேரி பல்கலையில் புதிய பட்டப்படிப்புகள்

வானியல் ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் எம்.எஸ்சி., ஆஸ்ட்ரோபிசிக்ஸ் பாடத்தை இந்த கல்வியாண்டில் இருந்து அறிமுகப்படுத்துகிறது. இந்த பட்டப்படிப்பை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆஸ்ட்ரோபிசிக்ஸ் மற்றும் இன்டர் யூனிவர்சிட்டி சென்டர் பார் ஆஸ்ட்ரோனாமி அன்ட் ஆஸ்ட்ரோபிசிக்ஸ் மையத்துடன் இணைந்து அளிக்கிறது. 4 செமஸ்டர்களைக் கொண்ட இந்தப் பட்டப்படிப்பில் சேர நுழைவுத் தேர்வு நடக்கிறது. இயற்பியலில் இளநிலை பட்டம் பெற்றவர்கள் மட்டுமே இப்பாடப்பிரிவில் சேர முடியும். மேலும், இந்த ஆண்டில் இருந்து எல்எல்எம் (கார்ப்பரேட் லா) பாடப்பிரிவையும் அறிமுகப்படுத்துகிறது. இந்தப் பாடப்பிரிவில் எல்எல்பி படிப்பை 50 விழுககாடு மதிப்பெண்ணுடன் முடித்த 20 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இதுமட்டுமல்லாமல் வெளிநாட்டு மொழிக் கல்விக்கான தனி மையமும் 9 வெளிநாட்டு மொழிகளில் டிப்ளமோ படிப்புகளை அளிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்