உள்ளூர் செய்திகள்

வளர்ந்து வரும் இணையதள கல்விமுறை

இணையதள கல்வி என்பது வகுப்பறைக்கு செல்லாமல் கம்ப்யூட்டர் வழியே கற்பது. இதை புதிய தலை முறையின் கல்விக்கான கருவி என்றும் கூறலாம். இக்கல்வி மூலம் நாம் விரும்பும் நேரத்தில், விரும்பிய இடங்களில் கற்கும் வாய்ப்பு, மற்றும் குறைவான செலவு, கல்வியில் சுதந்திரம் ஆகியவையும் உள்ளது. மேலும் உலகில் உள்ள அனைத்து மாணவர்களுடனும் உரையாடும் வாய்ப்பு ஏற்படுவதால் சிறந்த மொழியறிவு பெற முடியும். மாணவர்களுக்கு தேவையான தகவல்கள், நேரடி உரையாடல்கள், படிக்கும் மெட்டீரியல்கள்ஆகியவற்றை மின்னஞ்சல் மூலம் டவுண்லோடு செய்து கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. இக்கல்வி மூலம் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பிஎச்.டி., வரை கற்கலாம். அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இணையதள கல்வி அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்தியாவில் இக்கல்வி தொடக்க நிலையிலேயே உள்ளது. குறைந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் குறைவான மாணவர் சேர்க்கையே இந்தியாவில் நிலவுகிறது. அனுமதி பெற்ற சில கல்வி நிறுவனங்கள் இக்கல்விக்கான சேர்க்கையை நடத்துகின்றன. அவை ஐ.ஐ.டி., மும்பை, ஐ.ஐ.எம்., கோழிக்கோடு, மற்றும் இக்னோ.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்