கல்லூரிகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்
தமிழக சட்டப்பேரவையில் திங்கட்கிழமையன்று உயர்கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் பேசுகையில் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், தமிழக அரசு கல்வி நிலையங்களில் உள்ள அனைத்து காலியிடங்களும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடப்பு ஆண்டிலேயே நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக கோவை, திருநெல்வேலி, காரைக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளுக்காக மூன்று பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. பொறியியல், மருத்துவக் கல்லூரிகளுக்கு உள்ளது போல், கல்வியியல் (பி.எட்.) கல்லூரிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள சில பொறியியல் கல்லூரிகளுக்கும், ஒரு சில தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கும் வகுப்பறைகள் கட்டித் தரப்பட உள்ளது என்றும் அமைச்சர் பழனியப்பன் கூறியுள்ளார்.