உள்ளூர் செய்திகள்

மின்தடை: கல்வி நிறுவனங்கள் பாதிப்பு!

மின்வினியோகம் குறித்த கடிதம் சென்னை பல்கலைக் கழகத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதில், காலை 9:30 மணிமுதல் பிற்பகல் 1:30 மணி வரையிலும், மாலை 5 மணிமுதல் இரவு 9 மணி வரையிலும் மின்சாரத்தை பயன்படுத்தக் கூடாது என கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து, சென்னை பல்கலை துணைவேந்தரிடம் கேட்டபோது, “கடிதத்தில் குறிப்பிட்ட நேரத்தில் மின்சாரம் தடைபட்டால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், பகல் 12:30 மணி முதல் 2:30 மணி வரை என நேரத்தை மாற்றி அமைக்க மின்வாரியத் தலைவரிடம் கேட்டபோது, பரிசீலிப்பதாகக் கூறியுள்ளார்,” என்றார். கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் வகுப்பு நடக்கும் நேரத்தில் இவ்வாறு மின்வினியோகம் நிறுத்தப்பட்டால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்