உள்ளூர் செய்திகள்

பல்மருத்துவ மாணவர்கள் அமைச்சரிடம் முறையீடு

கடந்த மாதம், 1ம் தேதி முதல், 28ம் தேதி வரை, பி.டி.எஸ்., மாணவர்களுக்கு, ஆண்டு பொதுத் தேர்வு நடந்தது. அதில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் கீழ் இயங்கும், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில், 10 கல்லூரிகளைச் சேர்ந்த, 92 மாணவர்கள், தேர்வெழுத அனுமதிக்கப்படவில்லை. தேர்வெழுத போதுமான வருகைப் பதிவேடு உள்ளிட்ட தகுதிகள் இருந்தும், குறிப்பிட்ட மாணவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படாதது குறித்து, தமிழ்நாடு பல்மருத்துவ மாணவர் கூட்டமைப்பு சார்பில், முதல்வர் தனிப்பிரிவில் மனு கொடுக்கப்பட்டது. இம்மனு மீது, பல்கலை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காததை அடுத்து, கூட்டமைப்பின் நிர்வாகிகள், தலைமைச் செயலகத்தில், சுகாதார துறை அமைச்சர் வீரமணியை, நேற்று சந்தித்தனர். இதுகுறித்து, இக்கூட்டமைப்பின் பொதுச் செயலர் அருளப்ப ராஜ் கூறியதாவது: ஆண்டு தேர்வு முடிவுகள், ஏப்ரல் இறுதி வாரத்தில் வெளியாகும். அதற்கு முன், தேர்வெழுத அனுமதிக்கப்படாத, 92 பி.டி.எஸ்., மாணவர்களுக்கு, ஏப்ரல் முதல் வாரத்திற்குள் தனித்தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அமைச்சரிடம் கோரினோம். ஆவன செய்வதாக அவர் தெரிவித்தார். இவ்வாறு அருளப்ப ராஜ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்