உள்ளூர் செய்திகள்

ஓ.பி.ஜிண்டால் பல்கலையின் கோடைகாலப் பள்ளி

பள்ளி மாணவர்களிடம் தனித்திறனை வளர்க்கும் பொருட்டு, ஓ.பி.ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகம், ஜிண்டால் சர்வதேச கோடைகாலப் பள்ளி என்ற அம்சத்தை தொடங்கியுள்ளது. 15 முதல் 18 வயது வரையான பள்ளி மாணவர்கள் இதில் பங்கு கொள்ளலாம். ஜுன் மாதம் 3ம் தேதி முதல் 23ம் தேதி வரை, இது இயங்கும். இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், இதில் கலந்துகொள்ளலாம். இதில் கலந்துகொள்ளும் மாணவர்கள், வாழ்வின் பல்வேறான அம்சங்களை அறிந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த Jindal International Summer School -ல், செயல்முறை கற்றல், வாராந்திர கருத்தாக்கங்கள் மற்றும் கள சுற்றுலா போன்ற பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் கலந்துகொள்ள விண்ணப்பிப்பதற்கான படிவத்தை www.jgu.edu.in/jiss என்ற வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்கும் கடைசித்தேதி ஏப்ரல் 15. தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களின் பெயர் பட்டியல், ஏப்ரல் 20ம் தேதியே வெளியிடப்படும். மெரிட் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, உதவித்தொகை வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்