உள்ளூர் செய்திகள்

காந்திகிராம துணைவேந்தர் ராமசாமி விடுவிப்பு

காந்திகிராமம்:திண்டுக்கல், காந்திகிராம கிராமிய பல்கலை துணைவேந்தர் ராமசாமி, செப்., 9 ல், பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார். கடந்த 2009 ல், துணைவேந்தராக ராமசாமி பொறுப்பேற்றார்; 2012 ல், இவரது பணிக்காலம் முடிந்தது. தலா ஆறு மாதம் வீதம், மூன்று முறை பதவி நீட்டிப்பு செய்யப்பட்டு, பணியில் தொடர்கிறார். நீடிப்பு பதவிக்காலம், செப்., 30 ல் முடிகிறது. இந்நிலையில், மத்திய அரசு உத்தரவின்படி, செப்., 9 ல், ராமசாமி விடுவிக்கப்படுகிறார். "ஆங்கிலம் மற்றும் அயல்மொழிகள் புலத்தலைவர் ஜோசப்துரைராஜ், துணைவேந்தராக (பொறுப்பு) செயல்படுவார்" என பதிவாளர் நாராயணசாமி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்