கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க அழைப்பு
ராமநாதபுரம்: மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினத்தை சேர்ந்த தொழில் மற்றும் தொழில்நுட்ப கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு நடப்பாண்டு கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதிகள் கடந்தாண்டு பொதுத் தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் www.monascholarship.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்த மாணவ, மாணவியர் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தில் கையொப்பமிட்டு, மதிப்பெண் சான்றிதழ், ஜாதி மற்றும் வருமானச் சான்றிதழ் ஆகியவற்றின் நகலுடன், கல்விக் கட்டணம் செலுத்திய ரசீது, இருப்பிட முகவரி, வங்கி கணக்கு எண் ஆகிய விபரங்களை அக்.10ம் தேதிக்குள் பதிவதற்கு சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சிறுபான்மையினர் கமிஷனர், 807 அண்ணாசாலை(5வது மாடி) சென்னை என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். உரிய ஆவணங்கள் இல்லாத விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.