உள்ளூர் செய்திகள்

வசதிகள் கோரி மாணவர்கள் போராட்டம்

புதுச்சேரி: பள்ளியில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததைக் கண்டித்து, வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கரிக்கலாம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட போதிலும், போதுமான அடிப்படை வசதிகள் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. இதனைக் கண்டித்து, மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, பள்ளி நுழைவாயில் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர் சங்க செயலாளர் ஆனந்த், துணை செயலாளர் ரஞ்சித், ஜனநாயக சங்க செயலாளர் சரவணன் தலைமையில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது பள்ளி கேட்டிற்கு பூட்டு போட்டு மாணவர்கள் கோஷங்கள் எழுப்பினர். பின், பேரணியாக புறப்பட்டு சென்று வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மாணவர்கள் கூறுகையில், "பிளஸ் 2 வகுப்பிற்கு நிரந்தர ஆசிரியர்கள் இல்லை. வேறு பள்ளிகளிலிருந்து ஆசிரியர்களை வரவழைத்து பாடம் நடத்தி சமாளித்து வருகின்றனர். தேவையான எண்ணிக்கையில் வகுப்பறைகளும் இல்லை" என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்