உள்ளூர் செய்திகள்

என்.ஐ.டி. பேராசிரியருக்கு அலுமினி விருது

திருச்சி: திருச்சி என்.ஐ.டி.யில் நடந்த 50ம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியர் டாக்டர் ராமசுப்பிரமணியத்துக்கு அலுமினி விருது வழங்கப்பட்டது. ஆராய்ச்சி மற்றும் சர்வதேச அளவில் உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டு, கூட்டாக ஆராய்ச்சி மேற்கொள்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 2013 -14ம் கல்வி ஆண்டில் 50வது ஆண்டு பொன்விழாவை கொண்டாடுகிறது. என்.ஐ.டி. வளாகத்தில் நேற்று பொன்விழா ஆண்டு நிறைவு விழா நடந்தது. தமிழக கவர்னர் ரோசய்யா முன்னிலை வகித்தார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டார். விழாவில் 32 பேருக்கு அலுமினி விருது வழங்கப்பட்டது. விழாவில் கம்ப்யூட்டர் அறிவியல் துறையில் சிறப்பாக பணியாற்றிய பேராசிரியர் டாக்டர் ராமசுப்பிரமணியனுக்கு கான்பூர் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சேர்மன் அனந்த கிருஷ்ணன் விருது வழங்கி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்