சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி
விருதுநகர்: சென்னையில் டிச.,10ல் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடக்கிறது. சுற்றுச்சூழல்துறை சார்பில் நடக்கும் இப்பயிற்சியில் சுற்றுச்சூழல் கல்வி, திடக்கழிவு மேலாண்மை, மாசு தடுப்பு காரணிகள், இயற்கை பேரிடர்களில் இருந்து காப்பது, மழைநீர் சேகரிப்பு உள்ளிட்டவை தொடர்பாக சுற்றுச்சூழல்துறை இயக்குனர் மல்லேசப்பா, நிபுணர்கள் பேசுகின்றனர். இதில் கலந்து கொள்ள மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்களை அனுப்பிவைக்குமாறு 32 மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.