சத்துணவு மையங்களில் பி.டி.ஓ., ஆய்வு
தியாகதுருகம்: தியாகதுருகம் ஒன்றியத்தில் உள்ள சத்துணவு மையங்களில் பி.டி.ஓ., ஆய்வு செய்தார். தியாகதுருகம் ஒன்றியத்தில் உள்ள சத்துணவு மையங்களை பி.டி.ஓ.,க்கள் மயில்சாமி, சீனுவாசன் ஆகியோர் திடீரென ஆய்வு செய்தனர். முறைப்படி கலவை சாதம் சமைக்கப்படுகிறதா, மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்த முட்டை வழங்கப்படுகிறதா என்பது குறித்து சோதனை நடத்தினர். சுத்தமான தண்ணீரை சமையலுக்கு பயன்படுத்தவும், சமையலறையை சுகாதாரமாக வைத்திருக்கவும் பொறுப்பாளர் மற்றும் சமையலர்களுக்கு அறிவுறுத்தினர். பொரசக்குறிச்சி, எஸ்.ஒகையூர், கூத்தக்குடி ஆகிய பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டனர். துணை பி.டி.ஓ.,க்கள் வீராங்கன், கொளஞ்சிவேல், ரங்கசாமி, பன்னீர்செல்வம், மோகன்குமார் ஆகியோர் உடன் சென்றனர்.