மாணவ, மாணவியருக்கு அறிவுத்திறன் போட்டிகள்
கோத்தகிரி: கோத்தகிரியில் தமிழ்நாடு கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஆகியவை சார்பில், நான்கு நாள் கருத்தரங்கு நடந்தது. அதன் ஒருகட்டமாக, மாணவ, மாணவியருக்கு அறிவுத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. கோத்தகிரியில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவ,மாணவியர் பலர் பங்கேற்றனர். இதில், கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் சசிகுமார், ஓவியப்போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாம் இடத்திலும், பேச்சு போட்டியில் பள்ளி மாணவி பானுமதி, வட்டார அளவில் மூன்றாம் இடத்திலும் வெற்றிபெற்றனர். வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு, மாவட்ட கலெக்டர் சங்கர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.