உள்ளூர் செய்திகள்

மாணவர் திறன் உணர்தல் விழா!

சாத்தூர்: மேட்டமலை ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்ப்பேராயத்தின் சார்பில் மாணவர் திறன் உணர்தல் விழா நடந்தது. சிறுகதை எழுத்தாளர் கந்தகப் பூக்கள் ஸ்ரீபதி பேசினார். அப்போது அவர், "நாட்டு நடப்புகளை மாணவர்கள் வரலாற்று உணர்வுடன் புரிந்துகொள்ள வேண்டும். வரலாற்றை அறிந்து கொள்ளாத மனிதன் அடிமையாக வாழ நேரிடும். கலைகளின் மூலமே நற்பண்புகளையும் நல்லுணர்வுகளையும் விரைவாகப் பெற இயலும். தமிழர்கள் அனைவரும் ஒன்றினைந்து தமிழ் மொழியைக் காக்கவும், வளர்க்கவும் வேண்டும், என்றார். பல்வேறு திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களை கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணமூர்த்தி வாழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்