உள்ளூர் செய்திகள்

பல்வேறு லட்சியங்களுடன் கலக்கும் மாணவி!

சென்னை: வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தமிழ்ச்செல்வி, 15, தண்டையார்பேட்டை, டி.எஸ்.டி., ராஜா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறார். மாவட்ட, மாநில, தேசிய போட்டிகளில், 100க்கும் மேற்பட்ட பதக்கங்களை குவித்து, தடகளத்தில் தடம் பதித்து வரும் தமிழ்ச்செல்வி, படிப்பிலும் படு சுட்டி. அவர் கூறியதாவது: என் அப்பா பெயர் வெங்கடேசன்; அம்மா அமுதலட்சுமி. எனக்கு இரு சகோதரிகள் உள்ளனர். நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது, ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட ஆரம்பித்தேன். அதன்பின், பங்கேற்ற போட்டிகளில், தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறேன். கடந்த, 2013ம் ஆண்டு, பெங்களூரூவில் நடந்த, தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று, முதல் தங்க பதக்கத்தை வென்றேன். அடுத்த மாதம் ராஞ்சியில் நடக்க இருக்கும், தேசிய அளவிலான, பள்ளிகள் தடகள போட்டியில், பதக்கம் வெல்ல வேண்டும். அதில் பதக்கங்கள் வென்றால், வெளிநாடுகளில் நடக்கும், ஆசிய இளையோர் போட்டி, யூத் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். அதனால், ரஞ்சி போட்டி, எனக்கு ஒரு சவாலான போட்டி ஆகும். தற்போது, ஜூனியர் போட்டிகளில் பங்கேற்பதால், வரும், 2016 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க முடியாது. இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து, சீனியர் போட்டிகளில் பங்கேற்று, 2020ம் ஆண்டு நடக்கும், ஒலிம்பிக் போட்டிக்கு, இப்போது இருந்தே தயாராக முடிவு செய்து செயல்பட்டு வருகிறேன். அதுமட்டும் என் லட்சியம் அல்ல... நன்றாக படித்து, மாவட்ட ஆட்சியர் ஆகி, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே, என் குறிக்கோள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்