புதுடில்லியில் சர்வதேச புத்தக திருவிழா
புதுடில்லி: புதுடில்லியில் சர்வதேச புத்தக திருவிழா நாளை துவங்குகிறது. வரும் 22-ம் தேதி வரை இந்த புத்தக திருவிழா நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் ஆஸ்திரேலியா, சீனா, சிங்கப்பூர், எகிப்து, பிரான்ஸ், இந்தோனேஷியா, ஈரான், ஜெர்மனி, ஜப்பான், மலேசியா, நேபாளம், போலந்து, பாகிஸ்தான், சவுதிஅரேபியா, ஸ்பெயின், இலங்கை, துருக்கி, ஐக்கிய அரபு நாடுகள், அமெரிக்கா, சுவீடன், மற்றும் கியூபா உட்பட 30க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்க உள்ளன. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, இந்தி எழுத்தாளர் நரேந்திர கோஹ்லி, உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். கிரிக்கெட் வீரர் வீரேந்திரசேவாக் புத்தக திருவிழாவில் கலந்து கொள்கிறார். “மக்களிடையே புத்தகம் வாசிக்கும் திறன் அதிகரிக்க செய்வதே புத்தக திருவிழாவின் நோக்கமாகும்”, என என்பிடி சேர்மன் சேதுமாதவன் தெரிவித்துள்ளார்.