அரசு கலைக் கல்லூரியில் கேமரா
காமராஜர் அரசு கலைக் கல்லுாரியில், சி.சி. டிவி கேமராக்கள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கலித்தீர்த்தாள்குப்பத்தில் அமைந்துள்ள, காமராஜர் அரசு கலைக் கல்லுாரியில், 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு, சில மாதங்களுக்கு முன், மாணவர்களிடையே மோதல் வெடித்தது. கல்லுாரி வளாகத்தில், சம்பந்தமில்லாத இளைஞர்கள் நுழைந்து, பிரச்னைகளில் ஈடுபட்டனர். இதனால், ஒரு வாரத்துக்கு, கல்லுாரி மூடப்பட்டது.இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்கவும், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையிலும், கல்லுாரி நுழைவுவாயில் மற்றும் கல்லுாரி வளாகத்தை கண்காணிக்கும் விதமாக, சி.சி. டிவி கேமராக்கள் பொருத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.