கோவை காருண்யா பல்கலைக்கு விருது
கோவை மாநில அளவில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் சிறந்த பல்கலைக்கான விருது, கோவை காருண்யா பல்கலைக்கு வழங்கப்பட்டது. இந்திய விளையாட்டு வீரர்கள் நல பவுண்டேசன் மற்றும் தமிழ்நாடு அனைத்து விளையாட்டு வீரர்கள் சங்கம் சார்பில் தேசிய விளையாட்டு தினவிழா மற்றும் மாநில விருது வழங்கும் விழா, மதுரையில் நடந்தது. விழாவில், தேசிய விளையாட்டான ஹாக்கியை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவில் சாதனை புரிந்தோருக்கு மாநில அளவில் விருதுகள் வழங்கப்பட்டன. அவ்வகையில், சிறந்த பல்கலைக்கான விருதினை கோவை காருண்யா பல்கலை தட்டிச் சென்றது. திருப்பூர் மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் சேகர் இவ்விருதினை வழங்க, காருண்யா பல்கலை உடற்கல்வித்துறை இயக்குனர் காலேப் ராஜன், உதவி இயக்குனர் சத்தியகுமார் பெற்றுக்கொண்டனர்.