உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு

திருப்பூர்: டெங்கு காய்ச்சல் குறித்து மாணவ, மாணவியருக்கு பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் சில பகுதிகளில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் நோய் அறிகுறி இருப்பதால், பள்ளி மாணவர்களுக்கு, இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என, பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள, மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். வகுப்பறை சுகாதாரமாக இருக்க வேண்டும். வகுப்பறை, கழிப்பறை பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருந்தால், உடனடியாக அகற்ற வேண்டும். குடிநீர் வைத்துள்ள குடங்கள், தொட்டிகளை, கொசு உற்பத்தியாகாதபடி மூடி வைக்க வேண்டும். மாணவர்களுக்கு கடும் காய்ச்சல், சளி, இருமல் இருப்பின், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்ல பரிந்துரைக்க வேண்டும்; அதன்பின், அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்த வேண்டும். டெங்கு, பன்றி காய்ச்சல் போன்றவற்றுக்கு, சுய மருத்துவம் பார்க்கக்கூடாது என்பதை மாணவர்கள் வாயிலாக, பெற்றோருக்கு அறிவுறுத்த வேண்டும். பள்ளியில் நடக்கும் இறைவணக்க கூட்டத்தில், வாரத்தில் மூன்று நாட்கள் டெங்கு, பன்றி காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி, மாணவர்களை உறுதிமொழியேற்கச் செய்ய வேண்டும். முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள், இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார். எளிதாக இருக்கும். எனவே, திருப்பூர் மாவட்டத்துக்கான மண் ஆய்வு கூடத்தை, காங்கயம் தாலுகாவில் அமைக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்