உள்ளூர் செய்திகள்

பினாயில் தயாரிப்பு மாணவர்களுக்கு பயிற்சி

பொள்ளாச்சி அரசு பள்ளியில், கைத்தொழில் பாடத்தின் முதல் நிகழ்வாக, பினாயில் தயாரிக்கும் முறை குறித்து விளக்கப்பட்டது. பொள்ளாச்சி அருகே தா. நல்லிக்கவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், கைத்தொழில் பாடத்தின் முதலாக பினாயில் தயாரிக்கும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. தலைமையாசிரியர் சந்திரா தலைமை வகித்தார். அறிவியல் ஆசிரியர் சந்திரபாண்டியன், பினாயில் தயாரிக்கும் முறை குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். இதில், பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்