உள்ளூர் செய்திகள்

நூலக வசதி; மாணவர்கள் எதிர்பார்ப்பு

பல்லடம்: சித்தம்பலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், இணையதள வசதியுடன் நூலகம் அமைத்து தர வேண்டும் என, அப்பகுதி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சித்தம்பலம் ஊராட்சிக்கு உட்பட்ட புள்ளியப்பன்பாளையம், சித்தம்பலம் புதூர் பகுதிகளில், 3,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் அதிகளவில் உள்ளனர். நடுநிலைப்பள்ளி வரை மட்டுமே உள்ள இப்பகுதியில், மேற்படிப்புக்காக, பல்லடம், பொங்கலூர் பகுதிகளுக்கு சென்று மாணவர்கள் படித்து வருகின்றனர். போட்டி தேர்வுகள், உயர் கல்வி பாடங்கள் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் பொது அறிவு புத்தகங்களுக்காக பொங்கலூர் அல்லது திருப்பூருக்கு, மாணவர்கள் செல்ல வேண்டியுள்ளது. எனவே, இப்பகுதியில், இணையதள வசதியுடன் கூடிய நூலகம் அமைத்து தர வேண்டும் என்பதே, பெரும்பாலான மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது. வேலை உறுதி திட்டத்தில் மரக்கன்று நடுவதற்காக, தனியாரிடம் மரக்கன்று வாங்கி, நட்டு வருகிறோம். மழையால், இருப்பு வைக்கப்பட்டிருக்கலாம். அவற்றை கிராமங்களில் நட்டு வளர்க்க, நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்