உள்ளூர் செய்திகள்

குறைதீர் கற்பித்தல் பயிற்சி முகாம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், கற்றல் திறன் மலரும் குழந்தைகளுக்கான குறைதீர் கற்பித்தல் பயிற்சி முகாம் வட்டார வள மைய அலுவலகத்தில் நடந்தது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் கவிதா மற்றும் உதவி மற்றும் கூடுதல் உதவித்தொடக்க கல்வி அலுவலர்கள் மேரி மார்க்ரெட், கண்ணபிரான் ஆகியோர் பயிற்சியினை துவக்கி வைத்தனர். ஆசிரியர் பயிற்றுனர்கள் கூறியதாவது: கற்றல் திறனில் மெல்ல மலரும் மாணவர்களுக்கான குறைதீர் கற்பித்தல் செயல்பாடுகளை வடிவமைத்தல் மற்றும் இயல்பாக கற்கும் மாணவர்களுக்கு இணையாக மெல்ல கற்கும் மாணவரையும் முன்னேற்றமடையச் செய்தலே இப்பயிற்சியின் நோக்கமாகும். பயிற்சியின் போது, கற்றல் திறன் அடைவில் பின் தங்கியவர்களின் இயல்புகள், மெல்ல மலரும் குழந்தைகளுக்கு எந்த வகையில் கற்பிப்பது, தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் மாணவர்களுக்கு குறைதீர் கற்றல் செயல்பாடுகள் பற்றி விளக்கப்பட்டது. இவ்வாறு ஆசிரியர் பயிற்றுனர்கள் கூறினர். உயர் தொடக்க நிலை யை சேர்ந்த, 120 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்