உள்ளூர் செய்திகள்

சென்னை பல்கலை மாணவர்கள் போராட்டம்

சென்னை பல்கலை மாணவர்கள், நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை பல்கலையில் நடந்த, இயற்கை பேரிடர் கருத்தரங்கில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, இலங்கை தமிழ் மாணவர் குறுக்கிட்டதால், பிரச்னை ஏற்பட்டது. ஊழியர்களால் தாக்கப்பட்டதாக அவர் புகார் கொடுத்தார். இதனால், மாணவர்கள் போராட்டம் நடத்தியதால், குழப்பம் ஏற்பட்டதை அடுத்து, 23ம் தேதி முதல் திட்டமிட்டிருந்த பண்டிகை கால விடுமுறை, நேற்று முதலே அறிவிக்கப்பட்டது. ஜனவரி 3ம் தேதி வகுப்புகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டது; பல்கலை விடுதியும் பூட்டப்பட்டது. ஆனால், விடுதியை திறக்க வேண்டும் என, மாணவர்களில் ஒரு பிரிவினர், நேற்று போராட்டம் நடத்தினர். துணை வேந்தரை முற்றுகையிட முயற்சித்தனர்; போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்