கல்வி மாவட்ட தடகள போட்டி
சிவகங்கை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சிவகங்கை, தேவகோட்டை கல்வி மாவட்ட அளவிலான 6,7,8 ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு 100 மீ., 200 மீ., 400 மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஆகிய போட்டிகள் வரும் ஜன., 27 ல் நடக்கிறது. சிவகங்கையில் உள்ள மாவட்ட திறந்தவெளி விளையாட்டு அரங்கிலும், காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியிலும் காலை 9 மணிக்கு துவங்கும் இப்போட்டிகளில் பங்கேற்போருக்கு பயணப்படி, தினப்படி கிடையாது. வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படுவதுடன் மண்டல போட்டிக்கு அனுமதிக்கப்படுவர், என மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.