உள்ளூர் செய்திகள்

பாடத்திட்டங்களுக்கு மட்டும் சிண்டிகேட்டில் அனுமதி

மதுரை: சென்னையில் நடந்த மதுரை காமராஜ் பல்கலை சிண்டிகேட் கூட்டத்தில் புதிய பாடத் திட்டங்களுக்கு மட்டும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இக்கூட்டம் உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தலைமையில் நடந்தது. ராஜராஜன், வெங்கட்ராமன், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், சட்டசபை தேர்தல் நன்னடத்தை விதி அமலில் உள்ளதால் பல்கலை பணி நியமனங்கள், தற்காலிக ஊழியர் நியமனத்திற்கான அனுமதி உட்பட பல்கலை கொள்கை மற்றும் திட்டங்கள் சார்ந்த தீர்மானங்களுக்கான அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டது. இதுபோன்று தான் முன்னதாக நடந்த நிதிக்கமிட்டி கூட்டத்திலும் முடிவு எடுக்கப்பட்டன. பல்வேறு புகார்கள் குறித்து முக்கிய பொறுப்புகளில் உள்ள சிலர் மீது இக்கூட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. தேர்தல் விதி அமலில் உள்ளதால் அதுபோன்ற நடவடிக்கைகள் இக்கூட்டத்தில் ஒத்திவைக்கப்பட்டதாக பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்