குமரப்பருவக் கல்வி விழிப்புணர்வு முகாம்
புதுச்சேரி: காரைக்கால் திருவேட்டக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் எய்ட்ஸ் மற்றும் குமரப்பருவக் கல்வி விழிப்புணர்வு முகாம் பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் ஆனந்தன் தலைமை தாங்கினார். மூத்த ஆசிரியர் திருஞானசம்பந்தம் முன்னிலை வகித்தார். வரிசிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி தமிழ்வேலன் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு எய்ட்ஸ் மற்றும் குமரப்பருவக்கல்வி குறித்து விளக்கினார். மாணவ, மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். ஏற்பாடுகளை ஆசிரியர் குணசேகரன் செய்திருந்தார். ஆசிரியர் கணேஷ் நன்றி கூறினார்.