உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணா கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் இரண்டு நாள் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. இம்முகாமில், சென்னை கெஸ்ட்ஆம்ப், கோயம்புத்துார் லட்சுமி இன்டஸ்ட்ரீஸ், பெங்களூர் இன்டலன்ட் குளோபல் சர்வீஸ் ஆகிய முன்னணி நிறுவனங்கள் பங்கு பெற்று அனைத்து துறையைச் சேர்ந்த இறுதியாண்டு மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு நேர்காணல் மற்றும் தேர்வுகள் நடத்தின. இதில் கிருஷ்ணா பொறியியல் கல்லுாரி மாணவர்கள் பலர் தேர்ச்சி பெற்று பணி நியமன ஆணையை பெற்றனர். நிகழ்ச்சிக்கு கல்லுாரியின் தலைவர் குமார், முதல்வர் கணபதி முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு துறை தலைவர் சீனுவாசமூர்த்தி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்