எஸ்.ஆர்.வி.எஸ்., பள்ளியில் ஆண்டு விழா
காரைக்கால்: காரைக்கால் எஸ்.ஆர்.வி.எஸ்., நேஷனல் மேல்நிலைப்பள்ளியில் 13ம் ஆண்டு விழா நடந்தது. காரைக்கால் தருமபுரம் எஸ்.ஆர்.வி.எஸ்.,நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் 13ம் ஆண்டு விழா நடந்தது. விழாவில் பள்ளியில் தாளாளர் செல்லையன் தலைமை தாங்கினார். அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதல்வர் தில்லைவனம், புதுச்சேரியில் கல்வி வளர்ச்சி மற்றும் பள்ளியின் செயல்பாடுகள் குறித்தும், எதிர்காலத்தில் மாணவர்கள் முன்னேற்றம் குறித்தும் பேசினர். பள்ளியின் துணை முதல்வர் கந்தசாமி ஆண்டறிக்கையை வாசித்தார். முன்னதாக துணை முதல்வர் சுமதி அனைவரையும் வரவேற்றார். பள்ளி மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் அதிகம் மதிப்பெண் பெறுவதற்கு உறுதுனையாக உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சென்னை யுனைடெடு டெக்னோ இன்போ சிஸ்டத்தின் இணை இயக்குனர் விஜயலெட்சுமி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் அகஸ்டின் உள்ளிட்ட 200க்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.