உள்ளூர் செய்திகள்

உள்நாட்டு, வெளிநாட்டு படிப்புகளுக்கு கடனுதவி

இந்திய படிப்புகளுக்கு ரூ.10 லட்சமும், வெளிநாட்டு பல்கலை கழகங்களில் படிக்க ரூ.20 லட்சம் வரையும் வங்கிகளில் கடன் பெறலாம் என, வங்கியாளர் விருத்தாசலம் தெரிவித்தார். கல்விக் கடன்கள் பெறுவது குறித்து அவர் பேசியதாவது: கல்விக்கடன் பெற கடைபிடிக்க வேண்டிய அம்சங்கள் சில உள்ளன. முதலில் வங்கிக்கு செல்லும்போது மாலை நேரங்களில் அதிகாரிகளை பார்ப்பது அவசியம். இன்று போய் நாளை வா என அதிகாரிகள் கூறினாலும் விடாமல் முயற்சிக்க வேண்டும். பணம் இல்லை என எந்த மாணவரும் படிப்பை நிறுத்திவிடக்கூடாது என்பதற்காகவே மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை, ரிசர்வ் வங்கி, பொதுத்துறை வங்கிகளின் கூட்டமைப்பு இணைந்து கல்விக்கடன் திட்டங்களை வகுத்துள்ளது. கல்விக்கடன் பெற முதலில் கல்லுõரியில் மாணவர் சேர்க்கைக்கான அட்மிஷன் கார்டு அவசியம். அரசால் அங்கீகாரம் பெற்ற கல்லுõரிகளின் பட்டியல் மத்திய மனிதவளத்துறை அமைச்சக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் உள்ள கல்லுõரிகளில் படிப்பவர்களுக்கு கடன் வழங்கப்படும். நண்பரின் சொத்துக்கும் உண்டு: ரூ.4 லட்சம் வரையான கடன்களுக்கு ஈடு (செக்யூரிட்டி) தேவையில்லை. அதற்கு மேல் இருந்தால் ஈடு வழங்குவது அவசியம். மாணவர், பெற்றோரின் பான் கார்டு, வங்கி பணப்பரிவர்த்தனை நகல் இணைப்பது அவசியம். கடனுக்கு ஈடாக வீட்டுப் பத்திரங்கள், காலிமனை, வணிக வளாகங்களின் பத்திரங்கள் ஏற்கப்படும். விண்ணப்பதாரரின் நண்பரின் சொத்தும் ஏற்றுக்கொள்ளப்படும். அவர் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் கடன்தொகை திரும்பப்பெறும் வரை அவரும் வங்கிகளுக்கு பதில் கூற வேண்டிய நபராவார். ஊக்கத்தொகை: நான்கு ஆண்டுகள் வரை கடன் முறையாக கட்டப்பட்டால் ஒரு சதவீத வட்டித்தொகை ஊக்கத்தொகையாக மாணவர்களுக்கு வழங்கப்படும். படிப்பு முடிந்து ஓராண்டு வரை வங்கி உங்களிடம் பணத்தை திரும்ப கேட்காது. ஓராண்டு முடிந்த நிலையில் பணத்தை திரும்ப செலுத்துவது அவசியம். வேளாண், கூட்டுறவு வங்கிகளில் கல்விக்கடன் பெற முடியாது. பொதுத்துறை வங்கிகளில் மட்டுமே பெற முடியும். இந்திய படிப்புகளுக்கு ரூ.10 லட்சம், வெளிநாட்டு படிப்புகளுக்கு ரூ.20 லட்சம் வரை கடன் பெறலாம். வங்கிகளில் உள்ள திட்டங்களை பொறுத்து காலநிலை, வட்டி விகிதம் மாறுபடுகின்றன. இதனால் படித்தவுடன் வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடிய படிப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்