உள்ளூர் செய்திகள்

வங்கித் தேர்வுக்கு இலவச பயிற்சி

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் நிறுவனத்தில் நாளை(ஏப்., 10) பாரத ஸ்டேட் வங்கி தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. நிர்வாக இயக்குனர் வெங்கடாசலம் கூறியதாவது: அந்த வங்கியில் 17 ஆயிரத்து 140 எழுத்தர் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20-28 வயது பட்டதாரிகள் ஏப்.,௨௫ க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன் மெயின் மற்றும் நேர்முகத் தேர்வு நடந்தது. தற்போது முதற்கட்ட தேர்வாக &'பிரிலிமினரி&' சேர்க்கப்பட்டுள்ளது. இதில் 100 வினாக்கள் (கணிதம், நுண்ணறிவு, ஆங்கிலத் திறன்) இடம் பெறும், என்றார்.  விபரங்களுக்கு 98426 34271.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்