எம்.டி.எஸ்., படிப்புக்கு கலந்தாய்வு துவங்கியது
சென்னை: முதுநிலை பல் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு, இன்று நடக்கிறது. தமிழகத்தில், எம்.எஸ்., - எம்.டி., உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, சென்னை, ஓமந்துாரார் மருத்துவக் கல்லுாரியில், ஏப்., 4ம் தேதி முதல் துவங்கியது. எம்.எஸ்., - எம்.டி., படிப்புகளுக்கான கலந்தாய்வு, நேற்று நிறைவடைந்தது. இன்று, எம்.டி.எஸ்., எனப்படும் முதுநிலை பல் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு நடக்கிறது. அரசு கல்லுாரியில், - 21; சுயநிதி கல்லுாரிகளில் - 43 என, 64 இடங்கள் உள்ளன. இதற்கு, 200க்கும் மேற்பட்டோர் அழைக்கப்பட்டு உள்ளனர்.