உள்ளூர் செய்திகள்

கணக்கு பிணக்காக காரணம் ஆசிரியர்களே!

சென்னை: கணிதத்தின் மீது ஏற்படும் அச்சம், தகுந்தஆசிரியர்கள் இல்லாததால் பலமடங்கு அதிகரிக்கிறது என்று பட்டி மன்ற பேச்சாளர், பாரதி பாஸ்கர் பேசினார். பை கணித மன்றம் சார்பில், த ஜர்னி ஆப் ஜீனியஸ் - எக்சைட்டிங் சயின்டிபிக் அட்வெஞ்சர்ஸ் என்ற நுால் வெளியீட்டு விழா, சமீபத்தில் நடைபெற்றது. நுாலை, பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் வெளியிட, சென்னை, தரமணி கணித ஆய்வு மையத்தின் கணித பேராசிரியர் பரமேஸ்வரன் சங்கரன் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில், பரமேஸ்வரன் சங்கரன் பேசுகையில், நமது வாழ்வு மற்றும் இயற்கை சூழலில் கணிதம் பெரும் பங்காற்றுகிறது. கூகுளில், ஒரு வினாடிக்கு குறைவான நேரத்தில் கோப்புகள் கிடைப்பது, கணித அடிப்படையில் தான். கிரெடிட், டெபிட் அட்டைகள், வானியல் உள்ளிட்ட அறிவியல் துறைகளில் கணிதத்தின் பயன்பாடு குறித்து, எளிய முறையில், பை சிவராமனின் நுால் விளக்குகிறது, என்றார். பாரதி பாஸ்கர் பேசுகையில், கணிதம் என்றாலே அனைவருக்கும் அச்சம் ஏற்படுவதை போல எனக்கும் சிறுவயதில் ஏற்பட்டது. அதனை சரியான முறையில் போக்கும் ஆசிரியர் கிடைக்க வில்லை. அதனால், இன்றும், அந்த அச்சம் உள்ளது. தற்கால மாணவர்களின் கணித பயத்தை பை கணித மன்றம் போக்குகிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்